< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சக இணையதளங்கள் முடங்கின
|7 Jan 2024 1:44 AM IST
அரசாங்கத்தின் உயர்மட்ட இணையதளங்கள் வேலை செய்யாததற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
மாலி,
மாலத்தீவின் அதிபர், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் செயலிழந்து, அணுக முடியாத நிலையில் உள்ளன.
அரசாங்கத்தின் உயர்மட்ட இணையதளங்கள் வேலை செய்யாததற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுதொடர்பாக அந்நாட்டு அரசிடம் இருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.