< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
நியூயார்க்: ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சிலை திறப்பு
|15 Dec 2022 12:31 AM IST
ஐ.நா. தலைமையகத்தில் இந்தியா பரிசாக அளித்த காந்தி சிலை திறக்கப்பட்டது.
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசும் கூட்டாக சிலையை திறந்து வைத்தனர்.
இந்த சிலை, இந்தியா பரிசாக அளித்தது ஆகும். ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சிலை நிறுவப்படுவது இதுவே முதல்முறை. நடப்பு டிசம்பர் மாதத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இந்த நேரத்தில் காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள பிரமாண்டமான படேல் சிலையை வடிவமைத்த ராம் சுதார் என்ற பிரபல சிற்பி, காந்தி சிலையையும் உருவாக்கி உள்ளார்.