< Back
உலக செய்திகள்
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு

தினத்தந்தி
|
10 Jan 2023 3:41 AM IST

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜகார்தா,

இந்தோனேசியா நாட்டில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் டனிம்பர் தீவு மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நேற்று இரவு சரியாக 10.47 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

இதனால், இரவில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகள் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்