< Back
உலக செய்திகள்
பிலிப்பைன்சில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு

கோப்புப்படம்

உலக செய்திகள்

பிலிப்பைன்சில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு

தினத்தந்தி
|
8 Jan 2024 10:13 PM GMT

நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

மணிலா,

பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணமான சாரங்கனிக்கு தென்கிழக்கே சுமார் 100 கிமீ (62.1 மைல்) தொலைவில் தாக்கியது. 70.3 கிலோமீட்டர் (43.6 மைல்) ஆழத்தில் நில அதிர்வு நிகழ்வு 2048 GMT இல் நிகழ்ந்தது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

மேலும் செய்திகள்