< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
லண்டனில் தொலைந்த சொகுசு கார் பாகிஸ்தானில் மீட்பு... கண்டம் விட்டு கண்டம் நடந்த பலே திருட்டு
|4 Sept 2022 9:45 PM IST
லண்டனில் திருடப்பட்ட சொகுசு கார் கராச்சியில் கைப்பற்றப்பட்டது.
கராச்சி,
இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட ஆடம்பர காரானது பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சொகுசு பங்களா ஒன்றில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
சுமார் 23 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள இந்த காரின் பதிவும் போலியானது என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். போதிய ஆவணங்களை வழங்காததால், வீட்டின் உரிமையாளரையும், அவருக்கு வாகனத்தை விற்பனை செய்த தரகரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும் காரைக் கடத்தி வந்தந்தன் மூலம் 30 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டுள்ளது.