< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ஜெர்மனியில் 1,000 விமானங்கள் ரத்து
|28 July 2022 12:20 AM IST
விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஜெர்மனியில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பெர்லின்,
ஜெர்மனியின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் லுப்தான்சா. உள்நாட்டிலும் ஐரோப்பா முழுவதிலும் அதிகப்படியான விமான சேவைகளை வழங்கி வரும் இந்த நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையில் ஐரோப்பாவின் 2-வது பெரிய விமான நிறுவனமாக உள்ளது.
இந்த நிலையில் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லுப்தான்சா நிறுவனம் 1,000-க்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இதன்காரணமாக சுமார் 1,34,000 பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்ற அல்லது முழுவதுமாக ரத்து செய்ய வேண்டியிருந்தது.