< Back
உலக செய்திகள்
இங்கிலாந்தின் நன்மைக்காக ரிஷி சுனக் வெற்றியடைய வாழ்த்துக்கள் - முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்
உலக செய்திகள்

இங்கிலாந்தின் நன்மைக்காக ரிஷி சுனக் வெற்றியடைய வாழ்த்துக்கள் - முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்

தினத்தந்தி
|
25 Oct 2022 3:32 PM IST

ரிஷி சுனக் லண்டனில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வருகை தந்தார்.அவருக்கு முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.

லண்டன்,

இங்கிலாந்து பிரதமராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் லண்டனில் உள்ள 10 டவுனிங் வீதியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வருகை தந்தார். அவருக்கு முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு புறப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நமது நாடு புயலில் சிக்கி தொடர்ந்து போராடி வருகிறது. நான் பிரிட்டன் மற்றும் பிரிட்டிஷ் மக்களை நம்புகிறேன். நமக்கான பிரகாசமான நாட்கள் காத்திருக்கின்றன என்பதை நான் அறிவேன்.

ரஷிய அதிபர் புதினின் ஆக்கிரமிப்புக்கு எதிராக துணிச்சலான போராட்டத்தில் உள்ள உக்ரைனுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். உக்ரைன் வெற்றிபெற வேண்டும்.

நமது நாட்டின் பாதுகாப்பை நாம் தொடர்ந்து பலப்படுத்த வேண்டும். அதை சாதிக்க தான் நான் பாடுபட்டேன். நம் நாட்டின் நன்மைக்காக ரிஷி சுனக் வெற்றியடைய விரும்புகிறேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்