< Back
உலக செய்திகள்
உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு வேலியை தாண்டி குதித்தவரை கொன்ற சிங்கம்

கோப்புப்படம்

உலக செய்திகள்

உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு வேலியை தாண்டி குதித்தவரை கொன்ற சிங்கம்

தினத்தந்தி
|
30 Aug 2022 4:14 AM IST

ஆப்பிரிக்க நாட்டு உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு வேலியை தாண்டி குதித்தவரை சிங்கம் கொன்றது.

அக்ரா,

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ராவில் அந்நாட்டின் தேசிய உயிரியல் பூங்கா உள்ளது. நேற்றுமுன்தினம் வழக்கம் போல் இந்த உயிரியல் பூங்காவுக்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.

அவர்கள் அங்கு பாரமரிக்கப்பட்டு வரும் விலங்குகளை ஆர்வத்துடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். அப்போது சிங்கங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு சென்ற ஒரு நபர் திடீரென வேலியை தாண்டி சிங்கங்கள் இருந்த பகுதிக்குள் குதித்தார். அங்கிருந்தவர்கள் அனைவரும் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உயிரியல் பூங்கா அதிகாரிகள் விரைந்து வந்து சிங்கங்களிடம் இருந்து அந்த நபரை காப்பற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் ஒரு சிங்கம் அவரை கடித்து குதறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் செய்திகள்