< Back
உலக செய்திகள்
லிபியா: கிளர்ச்சியாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பலி எண்ணிக்கை  32 ஆக  உயர்வு
உலக செய்திகள்

லிபியா: கிளர்ச்சியாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

தினத்தந்தி
|
28 Aug 2022 5:07 PM IST

லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் இடையே நடந்து வரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

திரிபோலி,

வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும் கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஹைதம் தஜோரியின் திரிபோலி விடுதலை பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும் அப்தில் கானி அல் கில்கி தலைமையிலான கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தலைநகர் திரிபோலியில் நேற்று திடீரென மோதல் வெடித்தது.

இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு, வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பல்வேறு கட்டிடங்கள், வாகனங்களுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில், லிபியாவில் நடந்து வரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 159 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்