< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் - ஐ.நா. கவலை
|22 Nov 2022 1:49 PM IST
ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ, தனது காதலனாலோ கொல்லப்படுவதாக ஐ.நா. சபையின் தலைவர் குட்ரேஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐ.நா. சபை தலைவர் குட்ரெஸ் ஆற்றிய உரையில் கூறியதாவது:_
ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறுவனராலோ, தனது காதலனாலோ கொல்லப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை சமாளிக்க தேசிய செயல்திட்டங்களை அரசுகள் செயல்படுத்த வேண்டும். கொரோனா தொற்றுலிருந்து பொருளாதாரக் கொந்தளிப்பு வரை, தவிர்க்க முடியாமல் இன்னும் அதிகமான உடலாலும் மற்றும் மனதாலும் பெண்கள் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார்.