< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
லெபனானில் அகதிகளால் குற்றச்செயல்கள் அதிகரிப்பதாக ராணுவம் குற்றச்சாட்டு
|19 July 2023 3:32 AM IST
லெபனானில் அகதிகளால் குற்றச்செயல்கள் அதிகரிப்பதாக ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
பெய்ரூட்,
லெபனான் நாட்டில் லட்சக்கணக்கான அகதிகள் குடிபெயர்வது அங்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சிரியாவில் இருந்து மட்டும் சுமார் 20 லட்சம் பேர் அங்கு ஆதரவு கோரி வருகின்றனர். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தாலும் ஏராளமான அகதிகளுக்கு லெபனான் அடைக்கலம் கொடுக்கிறது.
இந்தநிலையில் வேலைவாய்ப்பு தொடர்பாக உள்நாட்டு மக்களுக்கும், அகதிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக அகதிகளால் ஏற்படும் குற்றச்செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ராணுவ வீரர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுவதாக அந்த நாட்டின் பாதுகாப்பு துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.