< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பிரேசிலில் தொடா் கனமழை: நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 30 பேர் பலி
|29 May 2022 2:41 AM IST
வடகிழக்கு பிரேசிலில் தொடா் கனமழை பெய்து வருகிறது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 30 போ் உயிாிழந்துள்ளனா்.
பிரேசிலியா,
வடகிழக்கு பிரேசிலில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வெள்ளம் குடியிப்பு பகுதிகளை சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளம் காரணமாக அலகோவாஸ், பெர்னாம்புகோ ஆகிய மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்நிலையில், வடகிழக்கு பிரேசிலில் பெய்து வரும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புக்குழுவினர், ராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் அச்சம் நிலவி வருகிறது.