< Back
உலக செய்திகள்
சீனாவில் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 47 பேர்- மீட்புப்பணிகள் தீவிரம்
உலக செய்திகள்

சீனாவில் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 47 பேர்- மீட்புப்பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
22 Jan 2024 12:26 PM IST

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்.

பீஜிங்,

சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷூய்குன் கிராமம் உள்ளது . இந்த கிராமத்தில் இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 10க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த 47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். கடந்த சில நாட்களாக இந்த நகரில் கடும் குளிருடன் மோசமான வானிலை நிலவி வந்தநிலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்