< Back
உலக செய்திகள்
கொலம்பியாவில் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு; வாகனங்கள் புதைந்தன - சிறுவர்கள் உள்பட 33 பேர் உயிரிழப்பு

Image Courtesy : AFP

உலக செய்திகள்

கொலம்பியாவில் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு; வாகனங்கள் புதைந்தன - சிறுவர்கள் உள்பட 33 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
7 Dec 2022 1:38 AM IST

நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரனெ பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

பொகோடா,

தென்அமெரிக்க நாடான கொலம்பியாவின் ரிசரால்டா மாகாணத்தில் பெரேரா-கிப்டோ என்கிற நெடுஞ்சாலை உள்ளது. மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள இந்த நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மதியம் வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

அப்போது அங்கு திடீரனெ பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பஸ், ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

நிலச்சரிவு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னரும் 33 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. உயிரிழந்தவர்களில் 3 சிறுவர்களும் அடங்குவர். 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் நிலச்சரிவில் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்