< Back
உலக செய்திகள்
நேபாளத்தில் நிலச்சரிவு; 7 பேர் பலி

கோப்பு படம்

உலக செய்திகள்

நேபாளத்தில் நிலச்சரிவு; 7 பேர் பலி

தினத்தந்தி
|
6 Aug 2024 7:17 PM IST

நேபாளத்தில் ஜூலை 12-ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பஸ்கள் திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்டதில், 7 இந்தியர்கள் உள்ளிட்ட 62 பயணிகள் காணாமல் போனார்கள்.

காத்மண்டு,

நேபாளத்தின் மேற்கே சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பாக்லங் மாவட்டத்தின் பதிகத் கிராமப்புற நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் பலர் சிக்கி கொண்டனர். 2 வீடுகள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்து உள்ளனர். காயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள், உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பகுதிக்கு நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி தகவல் அறிந்து நேபாள போலீசார் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சம்பவ பகுதிக்கு சென்றது. அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த ஜூலை 12-ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பஸ்கள் திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இதில், 7 இந்தியர்கள் உள்ளிட்ட 62 பயணிகள் காணாமல் போனார்கள். இந்த சோக சம்பவத்தில் 3 பேரே நீந்தி பாதுகாப்பாக கரை சேர்ந்தனர்.

மேலும் செய்திகள்