இங்கிலாந்தில் வினாடி-வினா போட்டி: இறுதிப்போட்டிக்கு தேர்வான கொல்கத்தா பட்டதாரி
|வினாடி-வினா போட்டியில் கொல்கத்தாவை சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான சவுரஜித் தேப்நாத் இடம் பெற்றிருந்தார்.
லண்டன்,
இங்கிலாந்தின் பிரபல பிபிசி தொலைக்காட்சி 'யுனிவர்சிட்டி சேலஞ்ச்' என்ற பெயரில் வினாடி வினா போட்டியை நடத்தி வருகிறது. அந்த நாட்டின் மிகவும் கடினமான வினாடி வினா போட்டியாக கருதப்படும் இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன.
இந்த நிலையில் இந்த வினாடி வினா போட்டி அண்மையில் தொடங்கிய நிலையில் அதன் அரைஇறுதி சுற்று கடந்த வாரம் நடந்தது. இந்த போட்டியில் லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்கள் குழு பங்கேற்றது. அந்த குழுவில் கொல்கத்தாவை சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான சவுரஜித் தேப்நாத் இடம் பெற்றார்.
போட்டியில் முன்வைக்கப்பட்ட பல கடினமான கேள்விகளுக்கு சவுரஜித் தேப்நாத் திறம்பட பதிலளித்தார். இதன் மூலம் அவரது குழு இறுதி சுற்றுக்கு தேர்வானது. வருகிற 8-ந்தேதி லண்டனில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.