< Back
உலக செய்திகள்
சீனாவில் சிறுவர் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்; 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி
உலக செய்திகள்

சீனாவில் சிறுவர் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்; 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி

தினத்தந்தி
|
10 July 2023 1:12 PM IST

சீனாவில் சிறுவர் பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர்.

பீஜிங்,

சீனாவின் தென்கிழக்கே குவாங்டாங் மாகாணத்தில் சிறுவர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 25 வயது வாலிபர் ஒருவர் திடீரென இன்று காலை 7.40 மணியளவில் பள்ளியில் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளார்.

இந்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர், பெற்றோரில் இருவர் மற்றும் 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர். இது உள்நோக்கத்துடன் நடந்த தாக்குதல் என லியான்ஜியாங் கவுன்டி போலீசார் கூறியுள்ளனர்.

அந்த நபரையும் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சீனாவில் பொதுமக்கள் இதுபோன்று ஆயுதங்களை வைத்திருப்பதற்கு கடுமையாக தடை விதிக்கிறது.

நாடு முழுவதும் சமீப காலங்களாக பள்ளிகளை இலக்காக வைத்து தாக்குதல்கள் நடத்துவது அதிகரித்து உள்ளன. இதனால், பள்ளிகளை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அதிகாரிகள் உள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் ஜியாங்சி மாகாணத்தில் கத்தியுடன் புகுந்த மர்ம நபர் நடத்திய தாக்குதலில், 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.

மேலும் செய்திகள்