< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜப்பானில் ஆளுங்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகும் பிரதமர்
|7 Dec 2023 10:33 PM IST
புமியோ கிஷிடா 2021-ம் ஆண்டு ஜப்பான் பிரதமராக பதவியேற்றாலும் கட்சியின் தலைவராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
டோக்கியோ,
ஜப்பானில் லிபரல் ஜனநாயக கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பொதுவாக பிரதமர் பதவியில் இருக்கும் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவது வழக்கம். ஆனால் புமியோ கிஷிடா 2021-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றாலும் கட்சியின் தலைவராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில் லிபரல் ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் இருந்து கிஷிடா ராஜினாமா செய்வதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கட்சியினர் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்துவதை தவிர்க்க வேண்டும் என அவர் கூறிய பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.