< Back
உலக செய்திகள்
கொரிய தீபகற்பத்தில் நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

Photo Credit:AP

உலக செய்திகள்

கொரிய தீபகற்பத்தில் நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

தினத்தந்தி
|
12 May 2024 6:39 AM GMT

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பியாங்க்யாங்கில் உள்ள ராணுவ தளத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பியாங்க்யாங்,

கொரிய தீபகற்பத்தில் தொடர் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளால் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. இதனை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து பல ஏவுகணை சோதனைகளை நடத்துகின்றது.

இந்தநிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பியாங்க்யாங்கில் உள்ள ராணுவ தளத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதிய மல்டிபிள் ராக்கெட் ஏவுகணை சோதனையை வடகொரிய ராணுவம் நடத்தியது. வடகொரியாவின் இந்த சோதனை தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரியா குற்றம் சாட்டி உள்ளது.

மேலும் செய்திகள்