< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை செயலாளர் ஒப்புதல்
|17 Jun 2022 3:28 PM IST
ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை செயலாளர் ஒப்புதல் அளித்து உள்ளார்.
லண்டன்
ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அமெரிக்க அரசாங்க ரகசிங்ககளை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். 50 வயதான ஜூலியன் அசாஞ்சே 2019 முதல் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தங்கி இருந்தார்.
உளவு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான உத்தரவில் இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரித்தி படேல் கையெழுத்திட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் வெள்ளிக்கிழமை அறிவித்து உள்ளது.