< Back
உலக செய்திகள்
ஜோ பைடன், அதிபர் பதவிக்கான உடல் தகுதியுடன் இருக்கிறார் - டாக்டர் தகவல்
உலக செய்திகள்

ஜோ பைடன், அதிபர் பதவிக்கான உடல் தகுதியுடன் இருக்கிறார் - டாக்டர் தகவல்

தினத்தந்தி
|
1 March 2024 4:30 AM IST

அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் உள்ளார். 81 வயது அவர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடவுள்ளார்.

அதே சமயம் ஜோ பைடனின் வயது மற்றும் அவரது உடல் நிலையை குறிப்பிட்டு அவர் அதிபராக இருக்க தகுதியற்றவர் என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் அதை மறுக்கும் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார்.

இந்த நிலையில் அதிபர் ஜோ பைடனுக்கு நேற்று முன்தினம் வருடாந்திர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு மருத்துவ துறைகளில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் மூலம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதை தொடர்ந்து, ஜோ பைடனின் மருத்துவ பரிசோதனை குறித்த விவரங்களை அவரது டாக்டர் கெவின் செய்தியாளர்களிடம் பகிர்ந்தார்.

அப்போது அவர், "அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து தனது கடமைகளை செய்ய முழு உடல் தகுதியுடன் உள்ளார். அவருக்கு பெரிய உடல்நல பிரச்சினைகள் எதுவும் இல்லை. அவர் அதிபராக இருப்பதற்கான உடல் தகுதியை கொண்டுள்ளார்" என கூறினார்.

மேலும் செய்திகள்