< Back
உலக செய்திகள்
பர்கினோ பாசோ: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி
உலக செய்திகள்

பர்கினோ பாசோ: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி

தினத்தந்தி
|
5 July 2022 5:11 AM IST

பர்கினோ பாசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.

ஒவ்கடங்கு,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால், இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினருக்கு உதவியாக அரசு ஆதரவு குழுக்களும் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பர்கினோ பாசோவின் கோஷி மாகாணத்தின் போர்ஸோ நகரில் உள்ள கிராமத்தில் பொதுமக்கள் மீது நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாத குழுக்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்