< Back
உலக செய்திகள்
கொலம்பியாவில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்படும் ஜாஸ் இசைத் திருவிழா
உலக செய்திகள்

கொலம்பியாவில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்படும் 'ஜாஸ்' இசைத் திருவிழா

தினத்தந்தி
|
22 Sept 2022 9:40 PM IST

இந்த இசைத்திருவிழா ஒரு கலாச்சார பறிமாற்றமாகவும், கொலம்பியாவின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

பொகோட்டா,

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் கொரோனா பரவலால், 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த 'ஜாஸ்' இசைத்திருவிழா இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் கொண்டாட்டப்பட்டு வரும் இந்த திருவிழாவில், சர்வதேச கலைஞர்களும், உள்ளூர் கலைஞர்களும் இணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

பொதுவெளிகளில் நடத்தப்படும் இந்த இசைத்திருவிழா ஒரு கலாச்சார பறிமாற்றமாகவும், கொலம்பியாவின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி 'ஜாஸ்' இசை விரும்பிகளுக்கு விருந்தாக அமைகிறது என இசை ரசிகர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் தோன்றிய 'ஜாஸ்' வகை இசை, 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லத்தின் அமெரிக்காவின் உயர்மட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் அது சாமானிய மக்களின் வாழ்வியலோடு ஒன்றிய இசையாக மாறியது என இசை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்