< Back
உலக செய்திகள்
இந்தியா, ரஷியாவை தொடர்ந்து நிலவிற்கு விண்கலம் அனுப்பும் ஜப்பான்...!
உலக செய்திகள்

இந்தியா, ரஷியாவை தொடர்ந்து நிலவிற்கு விண்கலம் அனுப்பும் ஜப்பான்...!

தினத்தந்தி
|
23 Aug 2023 4:04 PM IST

இந்தியா, ரஷியாவிற்கு அடுத்தப்படியாக ஜப்பானும் நிலவை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்புகிறது.

டோக்கியோ,

இந்தியா மற்றும் ரஷியா நாடுகள் சமீபத்தில் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது. இதில் ரஷியாவின் விண்கலம் நிலவில் மோதி தோல்வி அடைந்த நிலையில் இந்தியாவின் விக்ரம் லேண்டெர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நிலவை ஆய்வு செய்ய ஆகஸ்ட் 26-ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு ஜப்பான் எஸ்.எல்.ஐ. எம் விண்கலத்தை செலுத்த உள்ளது . இந்தியா, ரஷியாவுக்கு அடுத்து மூன்றாவது நாடாக ஜப்பான் நிலவை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்