< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
தேசிய பாதுகாப்புக்காக வெளிநாட்டு உதவிகளை செலவிட ஜப்பான் அரசு ஒப்புதல்
|10 Jun 2023 4:58 AM IST
உள்கட்டமைப்புகளை மேம்படுத்த கவனம் செலுத்தப்போவதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ,
ஜப்பான் கடந்த டிசம்பர் மாதம் ஒரு தேசிய பாதுகாப்பு உத்தியை ஏற்றுக்கொண்டது. அதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு செலவுகளை 310 பில்லியன் டாலர்களாக (சுமார் ரூ.25 லட்சம் கோடி) உயர்த்த திட்டமிட்டது.
ஆனால் கடன் அதிகரிப்பு மற்றும் ரஷியா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றுக்கு மத்தியில் ஜப்பான் தனது வெளிநாட்டு உதவியை பொருளாதாரம், கடல் சார் மற்றும் தேசிய பாதுகாப்பில் செலவிட ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரேடார்கள், ரோந்து படகுகள் ஆகியவற்றை வழங்குதல் மற்றும் துறைமுகம் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த கவனம் செலுத்தப்போவதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.