< Back
உலக செய்திகள்
ஜப்பான் பிரதமர் மார்ச் 20-ந்தேதி தென்கொரியாவுக்கு பயணம்
உலக செய்திகள்

ஜப்பான் பிரதமர் மார்ச் 20-ந்தேதி தென்கொரியாவுக்கு பயணம்

தினத்தந்தி
|
14 Feb 2024 9:59 AM IST

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில், தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

டோக்கியோ,

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வருகிற மார்ச் 20-ந்தேதி தென்கொரியாவுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார் என ஜப்பானில் இருந்து ஒளிபரப்பப்படும் புஜி தொலைக்காட்சி இன்று தெரிவித்து உள்ளது.

தென்கொரியாவில் வருகிற ஏப்ரலில் பொது தேர்தல் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சூழலில், தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலை சந்திக்கும் கிஷிடா, வடகொரியா உள்ளிட்ட விவகாரங்களை பற்றி ஆலோசனை மேற்கொள்வார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில், தென்கொரியாவுக்கு கிஷிடா பயணம் மேற்கொண்டார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு பகுதியாக அவரது இந்த பயணம் அமைந்தது.

மேலும் செய்திகள்