ஜப்பானில் வரலாறு காணாத மக்கள்தொகை வீழ்ச்சி..!
|ஜப்பானில் வரலாறு காணாத அளவில் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ,
உலகின் வல்லரசு நாடுகளின் ஒன்றாக ஜப்பான் உள்ளது. பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாகவும் ஜப்பான் திகழ்கிறது. இந்தநிலையில் இங்கு மக்கள்தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவுறுத்தலின் பேரில் ஜப்பானில் மக்கள்தொகை கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது.
இதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் சுமார் 12½ கோடி மக்கள்தொகையே பதிவாகி உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.65 சதவீதம் அதாவது 8 லட்சம் பேர் குறைவு எனவும் கூறப்படுகிறது.
இந்த கணக்கில் ஜப்பான் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் சுமார் 30 லட்சம் வெளிநாட்டினரும் அடங்குவர். இதனை நாட்டின் அவசரநிலையாக கருதி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் கிஷிடா தெரிவித்துள்ளார். மேலும் மக்கள்தொகையை அதிகரிக்கும் நோக்கில் சுமார் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் கோடி நிதியை ஜப்பான் அரசு ஒதுக்கியுள்ளது.