< Back
உலக செய்திகள்
கடும் மின்சார நெருக்கடியால் இருளில் மூழ்கிய ஜப்பான்...!
உலக செய்திகள்

கடும் மின்சார நெருக்கடியால் இருளில் மூழ்கிய ஜப்பான்...!

தினத்தந்தி
|
27 Jun 2022 2:59 PM GMT

மின்சார நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஜப்பான் அரசு மக்கள் மின்சிக்கனத்தை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

டோக்கியோ,

மின்சார நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஜப்பான் அரசு மக்கள் மின்சிக்கனத்தை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஜப்பானில் மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் அங்கு ஜூன் மாதத்தில் 35 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ஜப்பானில் வெப்பக்காற்று காரணமாக மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே நிலநடுக்கம் காரணமாக நாட்டின் அணுமின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேவை அதிகரித்திருப்பதால் அங்கு மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் மின்சிக்கனத்தை கடைபிடிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கும் ஜப்பான் அரசு, டோக்கியோ மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் 3 கோடியே 7 லட்சம் மக்களை வீடுகளில் விளக்குகளை அணைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கெனவே அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் மின்சார விளக்குகளை அணைத்து விட்ட இருளில் பணியாற்ற தொடங்கி விட்டனர்.

மேலும் செய்திகள்