< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டதால் ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு
|21 July 2023 5:22 AM IST
உலகளவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் சுற்றுலா துறை சற்று ஏற்றம் கண்டு வருகிறது.
டோக்கியோ,
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவியது. எனவே இதனை கட்டுப்படுத்த வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில் உலகளவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் சுற்றுலா துறை சற்று ஏற்றம் கண்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 1 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஜப்பான் வந்துள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக தென்கொரியாவில் இருந்து சுமார் 31 லட்சம் பேர், தைவானில் இருந்து 17 லட்சம் பேர் வந்துள்ளதாகவும் அந்த நாட்டின் சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.