< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜப்பான்: பயிற்சியின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
|21 April 2024 10:25 AM IST
ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 7 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
டோக்கியோ,
ஜப்பான் கடல்சார் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் நேற்று இரவு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கில் டோரிஷிமான் தீவில் இருந்து சுமார் 270 கி.மீ. தொலைவில் நடைபெற்ற நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியின்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த 2 ஹெலிகாப்டர்களிலும் தலா 4 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டரின் சேதமடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மீதம் உள்ள 7 பேர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.