< Back
உலக செய்திகள்
இந்தோனேசியாவில் ரஷிய வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

கோப்புப்படம்

உலக செய்திகள்

இந்தோனேசியாவில் ரஷிய வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

தினத்தந்தி
|
14 July 2023 12:27 AM IST

இந்தோனேசியாவில் ரஷிய வெளியுறவு மந்திரியை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசியான் வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அங்கு சென்றுள்ளார்.

இந்த நியைில் நேற்று மாநாட்டின் இடையே ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு பொருளாதார விவகாரங்கள் மற்றும் உக்ரைன் மோதல் தொடர்பான விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

முன்னதாக கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் போது செர்ஜி லாவ்ரோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்