< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஈரான் அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு...!
|15 Jan 2024 11:00 PM IST
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரான் சென்றுள்ளார்.
தெஹ்ரான்,
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி 2 நாள் பயணமாக ஈரான் சென்றுள்ளார். அவர் இன்று ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், ஈரானில் உள்ள சாம்பஹார் துறைமுகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதேபோல், ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் இப்ராகிம் ரைசியை சந்தித்த பின் ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஹசன் அமீர்அப்துல்லாஹின்னையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.