< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பலாத்காரம் செய்தவரை கொன்ற பெண்ணின் சிறை தண்டனை ரத்து - மெக்சிகோ அரசு உத்தரவு
|22 May 2023 3:52 AM IST
பெண்ணுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்து மெக்சிகோ அரசு உத்தரவிட்டு உள்ளது.
மெக்சிகோ சிட்டி,
அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் கடந்த 2021-ம் ஆண்டு இளம்பெண்ணை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது தன்னை பாதுகாத்து கொள்வதற்காக அந்த இளம்பெண் தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டு அவர் உயிரிழந்தார். இதனையடுத்து இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கில் அந்த நாட்டின் கோர்ட்டு இளம்பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் சுமார் ரூ.13 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு பெண்ணிய குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். அப்போது, `தனது உயிரை பாதுகாப்பது குற்றமல்ல' என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனை ஏற்றுக் கொண்ட மெக்சிகோ அரசாங்கம் அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதத்தை தற்போது ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.