< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அரசியலில் இருந்து விடைபெறுவதாக அறிவித்த ஜெசிந்தா ஆர்டன் - நாடாளுமன்றத்தில் இறுதி உரை
|6 April 2023 11:05 PM IST
நியூசிலாந்து பிரதமராக பதிவி வகித்து வந்த ஜெசிந்தா, கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
வெல்லிங்டன்,
உலகில் மிக இளம் வயதில் ஒரு நாட்டின் உயரிய பதவியை அடைந்த பெண் என்ற பெருமையை அடைந்தவர் ஜெசிந்தா ஆர்டன். நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதிவி வகித்து வந்த அவர், கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அவரது தொழிலாளர் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இனி அரசியலில் இருந்து விலகி தனது 4 வயது மகளுடன் நேரம் செலவிட விரும்புவதாக தெரிவித்த ஜெசிந்தா, நேற்று நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் உணர்ச்சிகரமாக தனது இறுதி உரையை ஆற்றினார். அவர் பேசிய பிறகு அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி ஜெசிந்தாவுக்கு விடைகொடுத்தனர்.