< Back
உலக செய்திகள்
ரத்தன் டாடாவின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இரங்கல்
உலக செய்திகள்

ரத்தன் டாடாவின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இரங்கல்

தினத்தந்தி
|
13 Oct 2024 4:19 AM IST

இந்திய தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம்

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரதமர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் , "எனது நண்பரான பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தியாவின் பெருமைமிகு மகனும், நமது இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவின் சாம்பியனுமான ரத்தன் நேவல் டாடாவின் இழப்பிற்காக நானும் இஸ்ரேலில் உள்ள பலரும் துக்கப்படுகிறோம். ரத்தன் டாடாவின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் .பெஞ்சமின் நெதன்யாகு பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்