< Back
உலக செய்திகள்
காசா முனை பகுதியின் மீது இஸ்ரேல் ராணுவம் வான் வழித்தாக்குதல்
உலக செய்திகள்

காசா முனை பகுதியின் மீது இஸ்ரேல் ராணுவம் வான் வழித்தாக்குதல்

தினத்தந்தி
|
5 Aug 2022 7:57 PM IST

இஸ்ரேலில் உள்ள ராணுவ படைத்தளங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, காசா முனையின் மத்திய பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித்தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இஸ்ரேலில் உள்ள ராணுவ படைத்தளங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்