< Back
உலக செய்திகள்
சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்- 15 பேர் பலி

photo Credit: AFP

உலக செய்திகள்

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்- 15 பேர் பலி

தினத்தந்தி
|
9 Sept 2024 12:37 PM IST

சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை மூலம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

டமாஸ்கஸ்

சிரியாவின் மத்திய பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை இஸ்ரேலிய போர் விமானங்கள் அதிகாலையில் தாக்கின. குண்டுமழை பொழிந்ததுடன் ஏவுகணை தாக்குதலும் நடந்தது. இதற்கு சிரிய பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

ஹமா மாகாணத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 34 பேர் காயமடைந்துள்ளனர். 15 பேர் கொல்லப்பட்டதை தேசிய மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பைசல் ஹைதர் உறுதி செய்துள்ளார். சிரியா- இஸ்ரேல் இடையே நீண்ட காலமாகவே நல்லுறவு கிடையாது. சிரியாவில் உள்நாட்டு போர் ஏற்பட்ட பிறகு அவ்வப்போது சிரியா மீது இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்