தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்.. காசா முனையில் 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி
|ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட தெற்கு காசாவின் சில பகுதிகளில் உள்ள மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கூறியிருக்கிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசா முனையில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காசாவில் தரைவழி தாக்குதலையும் தொடங்கியுள்ளது,.
அதேபோல், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதலை நடத்துகின்றனர். காசாவில் இஸ்ரேல் படையினர் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே துப்பாக்கிச்சண்டையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசா முனையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட தெற்கு காசாவின் சில பகுதிகளில் உள்ள மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கூறியிருக்கிறது. இதுதொடர்பான துண்டு பிரசுரங்களை இஸ்ரேல் ராணுவம் வீசியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை விரிவுபடுத்த உள்ளதை இது காட்டுகிறது.
ஹமாஸ் அமைப்பின் பிடியில் இன்னும் 137 பணயக் கைதிகள் இருப்பதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்ப்டடுள்ளது. போர் நிறுத்த காலத்தின்போது 110 பணயக் கைதிகளை (86 இஸ்ரேலியர்கள், 24 வெளிநாட்டவர்கள்) ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.