< Back
உலக செய்திகள்
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 10 நேபாள மாணவர்கள் உயிரிழப்பு
உலக செய்திகள்

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 10 நேபாள மாணவர்கள் உயிரிழப்பு

தினத்தந்தி
|
8 Oct 2023 9:44 PM IST

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 10 நேபாள மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள நேபாள தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது போர் தொடுத்துள்ள ஹமாஸ் அமைப்பு, வெற்றி இலக்கை அடையும் வரை தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது. அதே நேரத்தில், இஸ்ரேல் ராணுவ முகாம்களில் இருந்த ராணுவ உயர் அதிகாரிகள், வீரர்களை ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஏராளமான பொதுமக்களையும் பணயக் கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த 17 பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேலுக்கான நேபாள தூதரகம் தெரிவித்தது.

இந்தநிலையில், இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 10 நேபாள மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள நேபாள தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். நேபாள மாணவர்கள் பலர் படித்துக்கொண்டே இஸ்ரேலில் வேலை செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் நேபாள மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்