< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி: பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3% உயர்வு
|30 Oct 2023 1:48 AM IST
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 90.44 டாலராக உயர்ந்துள்ளது.
ஜெருசலேம்,
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.
இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி காலை தாக்குதலை தொடங்கினர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் போர் அறிவிப்பை வெளியிட்டது. இரு தரப்புக்கும் இடையே போர் தொடர்ந்து 24-வது நாளாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் எதிரொலியாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 90.44 டாலராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் தாக்கம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.