< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் தாக்குதலில் சீக்கியர் பலி
|26 Jun 2023 2:42 AM IST
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் தாக்குதலில் சீக்கியர் ஒருவர் உயிரிழந்தார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 4 சதவீதம் சிறுபான்மையினராக உள்ளனர். அங்கு சமீப காலமாக இவர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், மன்மோகன் சிங் என்ற சீக்கியர் ஒருவர் அங்குள்ள பெஷாவர் நகரில் நடந்து சென்றார். அப்போது ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர் அவர் மீது சரமாரி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடினர்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு வசிக்கும் சிறுபான்மையினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.