< Back
உலக செய்திகள்
பிகாசோவின் ஒரு ஓவியம் ரூ.1000 கோடியா?
உலக செய்திகள்

பிகாசோவின் ஒரு ஓவியம் ரூ.1000 கோடியா?

தினத்தந்தி
|
2 Nov 2023 5:24 PM IST

அமெரிக்காவில் புகழ் பெற்ற ஓவியங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 8ம் தேதி தலை சிறந்த ஓவியங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி ஒன்று தொடங்கவுள்ளது. இங்கு உலக புகழ் பெற்ற ஓவியர்களின் பல்வேறு ஓவியங்கள் ஏலம் விடப்படவுள்ளது.

இந்த ஏல நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோவின் தலைசிறந்த ஓவியம் ஒன்றும் ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஓவியம் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க ஓவியரான ஜீன்-மைக்கேல் பாஸ்குயட் 1982ல் வரைந்த 8 அடி உயரமுள்ள ஓவியமும் ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஓவியம் 499 கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்