< Back
உலக செய்திகள்
அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கார் பதவி விலகப்போவதாக அறிவிப்பு

Image Courtesy : AFP

உலக செய்திகள்

அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கார் பதவி விலகப்போவதாக அறிவிப்பு

தினத்தந்தி
|
20 March 2024 7:26 PM IST

லியோ வரத்கார் அயர்லாந்தைச் சேர்ந்த தாய்க்கும், இந்தியாவைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்தவர் ஆவார்.

டப்ளின்,

அயர்லாந்து நாட்டின் பிரதமர் லியோ வரத்கார், தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். அதோடு அயர்லாந்து கூட்டணி அரசாங்கத்தின் ஒரு அங்கமான பைன் கோயல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் லியோ வரத்கார் விலகியுள்ளார்.

பைன் கோயல் கட்சியின் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும், தனிப்பட்ட காரணங்கள் மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் லியோ வர்த்கார் கூறியுள்ளார்.

தற்போது 45 வயதாகும் லியோ வரத்கார், இதற்கு முன்பு கடந்த 2017 முதல் 2020 வரை பிரதமராக பதவி வகித்தார். அதன் பிறகு 2022 டிசம்பர் மாதம் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவர் முதன்முதலில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நாட்டின் மிக இளம் வயது பிரதமராக இருந்தார்.

மேலும் லியோ வரத்கார் தன்னை ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட பிரதமர் ஆவார். இவரது தாயார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்