< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஈராக்கில் போதைப்பொருள் கடத்திய 7 பேருக்கு மரண தண்டனை
|10 Jun 2024 10:49 PM IST
ஈராக்கில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
பாக்தாத்,
ஈராக்கில் பயங்கரவாத செயல்கள் அதிகரிக்க போதைப்பொருள் புழக்கமே காரணம் என கூறப்படுகிறது. ஏனெனில் பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கும் முக்கிய ஆதாரமாக போதைப்பொருள் வர்த்தகம் உள்ளது. இதனால் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி உத்தரவிட்டார். அதன்படி போதைப்பொருள் பயன்பாட்டை கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அண்டை நாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு அங்குள்ள கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.