< Back
உலக செய்திகள்
ஈராக்கில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 15 ஆண்டு சிறை

கோப்புப்படம்

உலக செய்திகள்

ஈராக்கில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 15 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
29 April 2024 2:49 AM IST

ஈராக்கில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.

பாக்தாத்,

ஓரினசேர்க்கைக்கு எதிரான நாடுகளில் ஒன்றாக ஈராக் திகழ்கிறது. இதனை எதிர்க்கும் வகையில் ஈராக் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது எம்.பிக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இந்தநிலையில் பெரும்பான்மையினர் ஆதரவுடன் ஈராக்கில் ஓரின சேர்க்கை, விபசாரம் உள்ளிட்டவற்றை குற்றமாக அறிவித்து சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஈராக்கில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது.

விபசாரத்திற்கு சிறை தண்டனை, திருநங்கைகள், திருநம்பிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபடும் டாக்டர்களுக்கு தண்டனை உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈராக்கில் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவோர்க்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அழுத்தம் காரணமாக அது நிறுத்தி வைக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.

மேலும் செய்திகள்