< Back
உலக செய்திகள்
ஈராக்: கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் தொடரும் - ஷியா தலைவர் அல்-சதர்
உலக செய்திகள்

ஈராக்: கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் தொடரும் - ஷியா தலைவர் அல்-சதர்

தினத்தந்தி
|
4 Aug 2022 12:41 PM IST

தேர்தலில், அவரது கட்சி 73 இடங்களை வென்ற நிலையில், யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.

பாக்தாத்,

ஈராக் அரசியலில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர், ஒரு காலத்தில் அமெரிக்க-எதிர்ப்பு போராளிகளை வழிநடத்தியவர் மற்றும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட செல்வாக்குமிக்க தலைவராக திகழ்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில், அவரது கட்சி 73 இடங்களை வென்ற நிலையில், யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.

ஈரான் ஆதரவு ஒருங்கிணைப்புடன் ஈராக்கில் பிரதமர் வேட்பாளர்களுடன் அரசாங்கத்தை அமைக்க அல் சதர் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதன் காரணமாக, அல்-சதர் மற்றும் அவரது போட்டியாளர்களுக்கு இடையிலான முட்டுக்கட்டையால், தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்தும்கூட, ஈராக்கில் ஒரு சாதனையாக இன்னும் அரசாங்கம் இல்லாத நிலை உள்ளது.

இதனிடையே, கடந்த சனிக்கிழமையன்று பாராளுமன்ற கட்டிடத்தை அல்-சதர் ஆதரவாளர்கள் இரண்டாவது முறையாக முற்றுகையிட்டனர். கடந்த 5 நாட்களாக போராட்டக்காரர்கள் கட்டிடத்திற்குள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அல்-சதர் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தைச் சுற்றி கூடாரங்கள் மற்றும் உணவுக் கடைகளுடன் கூடிய முகாமை அமைத்துள்ளனர்.

இந்நிலையில், அல்-சதர் தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பாக்தாத்தில் உள்ள நாடாளுமன்றத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களை அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தை கலைத்தல் மற்றும் முன்கூட்டியே தேர்தல் நடத்துவது உட்பட அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களை அவர் வலியுறுத்தினார்.

"நாடாளுமன்றத்தை கலைத்து முன்கூட்டியே தேர்தலை நடத்துங்கள். நான் இதற்காக எந்த தியகத்தையும் செய்யத் தயார்" என்று அல்-சதர் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறியுள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்