ஈரானில் 2 பெண்களுக்கு மரண தண்டனை; ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கில் அதிரடி
|ஷரியத் சட்டத்தை மீறி உள்ள 2 ஈரான்பெண்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
டெக்ரான்,
ஈரான் நாட்டில் ஜாஹ்ரா செதிகி ஹமேதானி (வயது 31). எல்ஹாம் சுப்தார் (24) ஆகிய 2 பெண்கள் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர்கள் 2 பேர் மீதும் வடமேற்கு நகரமான உர்மியாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் 2 பேருக்கும் முன்தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தகவலை ஹெங்காவ் குர்திஷ் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. பூமியில் ஊழலை பரப்பியதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஷரியத் சட்டத்தை மீறி உள்ளனர், உர்மியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தண்டனை விவரம் தெரிவிக்கப்பட்டு விட்டது என்று அந்த அமைப்பு கூறுகிறது.
2 பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை ஈரான் நீதித்துறை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த தீர்ப்பு அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.