< Back
உலக செய்திகள்
ஈரான் புரட்சிப்படையின் 2 விஞ்ஞானிகள் மர்மமான முறையில் மரணம் - பின்னணியில் இஸ்ரேல்?
உலக செய்திகள்

ஈரான் புரட்சிப்படையின் 2 விஞ்ஞானிகள் மர்மமான முறையில் மரணம் - பின்னணியில் இஸ்ரேல்?

தினத்தந்தி
|
13 Jun 2022 5:34 PM IST

ஈரான் புரட்சிப்படையின் 2 விஞ்ஞானிகள் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்.

தெஹ்ரான்,

ஈரான் ராணுவத்தில் புரட்சிப்படை பிரிவு உள்ளது. இந்த புரட்சிப்படை ஈரானின் நலனுக்காக வெளிநாடுகளில் பல்வேறு ராணுவ, அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது. இந்த புரட்சிப்படையில் தரைப்படை, விமானப்படை, குவாட்ஸ் படை, கடற்படை, பஸ்சிஜி படை என 5 பிரிவுகள் உள்ளன.

இந்த படைப்பிரிவுகள் ஈரானின் எதிரியாக கருத்தப்படும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தல் நடத்துதல், ராணுவ பலத்தை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக ஈரான் புரட்சிப்படையின் தளபதிகள், முக்கிய நபர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், புரட்சிப்படையின் விமானப்படை பிரிவை சேர்ந்த 2 விஞ்ஞானிகள் இன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். ஈரான் புரட்சிப்படையின் விமானப்படை பிரிவில் பணியாற்றி வந்த அலி கமனி, முகமது அப்டோஸ் என்ற 2 விஞ்ஞானிகள் உயிரிழந்துள்ளனர். ஆளில்லா விமானங்கள், செயற்கைக்கோள்கள், ஏவுகணைகளை தயாரிக்கும் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் முகமது கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். அதேவேளை, விமானப்படையின் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த அலி கமனியும் கார் விபத்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த இரு மரணங்களுக்கு பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த 3-ம் தேதி புரட்சிப்படையின் குவாட்ஸ் பிரிவு கர்னல் அலி இஸ்மாயில்சாதிக் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். முன்னதாக, கடந்த 24-ம் தேதி குவாட்ஸ் பிரிவின் கர்னல் ஹசன் சையது ஹூடாய் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டபோது பைக்கில் வந்த இருவர் ஹசனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.

அதேபோல், கடந்த 2020-ம் ஆண்டு ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மோசென் பக்ரிசாதே தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க... ஈரான் புரட்சிப்படையின் மற்றொரு தளபதி மர்மமான முறையில் உயிரிழப்பு - பின்னணியில் இஸ்ரேல்?

மேலும் செய்திகள்