< Back
உலக செய்திகள்
அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம் கோஷங்களுடன் ஈரானில் போராட்டம்

Image Courtesy: AFP

உலக செய்திகள்

'அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம்' கோஷங்களுடன் ஈரானில் போராட்டம்

தினத்தந்தி
|
17 July 2022 1:41 AM IST

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தெஹ்ரான்,

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

4 நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜோ பைடன் முதல் நாடாக இஸ்ரேல் சென்றார். அதனை தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்ட ஜோ பைடன் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார்.

ஜோ பைடனின் இந்த பயணம் ஈரானை மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஜோ பைடனின் இந்த பயணத்தின் போது தங்கள் வான்பரப்பை இஸ்ரேல் பயன்படுத்த சவுதி அரேபியா அனுமதி அளித்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மத்திய கிழக்கு நாடுகளின் பயணத்திற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரான் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது.

'அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம்' என்ற கோஷங்களுடன் திரண்ட போராட்டக்காரர்கள் இரு நாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் அமெரிக்கா , இஸ்ரேலின் தேசிய கொடிகளையும் தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்