< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஈரானில் 25 ராணுவ வீரர்களை கொன்ற பயங்கரவாதிக்கு மரண தண்டனை
|6 May 2023 11:04 PM IST
ஈரானில் 25 ராணுவ வீரர்களை கொன்ற பயங்கரவாதிக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஈரானின் தெற்கு மாகாணமான குசெஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு ராணுவ அணிவகுப்பு நடந்தது. அதில் பயங்கரவாதிகள் சிலர் ராணுவ வீரர்கள் போல வேடமிட்டு கலந்து கொண்டனர். திடீரென அந்த பயங்கரவாதிகள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சுட்டு தள்ளினர். இதில் 25-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிறுவன் உள்பட 70 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த பராஜோல்லா சாப் என்பவரை 2020-ம் ஆண்டு சுவீடனில் வைத்து ஈரான் போலீசார் கைது செய்தனர். பின்னர் இது தொடர்பான வழக்கில் கடந்த மார்ச் மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று அவர் தூக்கிலிடப்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.